கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்ற பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த நபரை மாணவிகளே விரட்டிச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் ஆசனூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான தீன் என்பதும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.