திருவண்ணாமலையில் ஏலச்சீட்டு நடத்தி பணமோசடி செய்ததாக ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.ஆரணியை சேர்ந்த மகேந்திரன்,தேவி தம்பதி சுபிக்ஷா பைனான்ஸ் மூலம் 100-க்கும் மேற்பட்டோரிடம் 5 லட்ச ரூபாய் வரை மாத சீட்டினை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு 81 பேரிடம் சுமார் 28 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயினை பெற்று கொண்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து மகேந்திரனை தேடி வந்த குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், திருவண்ணாமலை - திண்டிவனம் பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை தேடி வருகின்றனர்.தகவலறிந்து பணம் இழந்தவர்கள் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.