Also Watch
Read this
By: Fyrose Banu

விழுப்புரம் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி பின்னர் சாதியை குறிப்பிட்டு அவமதித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T. எடையார் கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கரளப்பாக்கம் அஞ்சல் கீழக் கொண்டையார் கிராமத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணன் (29) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. 
சாதியை குறிப்பிட்டு திருமணம் செய்ய மறுப்பு
பின்னர் சாதியை குறிப்பிட்டு திட்டி திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கை உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா IPS புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கிய ஜோதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஜய் கிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved