மதுரை திருப்பாலை காவல் நிலையம் நாகனாகுளம் கண்மாய் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மனித தலையால் பரபரப்பு நிலவியது. நாகனாகுளம் கண்மாய் அருகே வாசுநகர் எதிர்புறம் நத்தம் சாலையோரம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் படி அங்கு வந்த தல்லாகுளம் போலீசார் தலையை மீட்டு மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பின்னர் தலை துண்டிக்கப்பட்டதா ? இல்லை வேற பகுதியில் கொலை செய்துவிட்டு தலை இங்கு கொண்டு வந்து போடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.