திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் நின்ற அரசு பேருந்து மீது கொரியர் ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். குடியாத்தத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியது.