Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பரமேஸ்வரன். இவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட எல்லையான செய்துங்கநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் பணி செய்து கொண்டிருந்தார்.
இந்த எல்லைப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்வதற்காக சாலையில் இருபுறமும் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இவர் பணியில் இருந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விபரங்கள் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து வேகமாக வந்த ஒரு கார் பேரிகார்டின் மீது மோதியது. இதில் பேரிகார்ட் தலைமை காவலர் பரமேஸ்வரன் மீது விழுந்தது. இதில் பரமேஸ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
காயம் ஏற்பட்ட தலைமை காவலரை சக போலீசார் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிற்காமல் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்து விசாரணை
செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாகனம் மோதிய சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடினமான பணிகளை செய்து வரும் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்கள் பொதுமக்களாகிய நாம் வேகத்தை குறித்து சாலை விதிகளை மதித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved