news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுபநிகழ்ச்சிக்கான அலங்காரப் பொருள் குடோனில் விபத்து
tv

Also Watch

tv

Read this

சுபநிகழ்ச்சிக்கான அலங்காரப் பொருள் குடோனில் விபத்து

சூலக்கல்புதூர், திருப்பூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குடோனில் விபத்து

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சூலக்கல்புதூர் பகுதியில் திருமணத்திற்கு மணவறை அமைக்கும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து. சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் கட்டிடம் சேதம்.

காங்கேயம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காங்கேயம் காவல்துறை விசாரணை காங்கேயம் முத்தூர் சாலை பாப்பினி ஊராட்சிக்கு உட்பட்ட சூலக்கல்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

இதில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மணவறை மற்றும் அலங்காரங்கள் அமைக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், துணிகள்,இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.இந்த குடோன் சுமார் 50 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்டது. இதில் இன்று திடீரென தீ பிடித்து புகை வந்துள்ளது. பின்னர் மளமளவென தீ பிடித்து எரிய துவங்கி உள்ளது.

பின்னர் குடோன் முழுவதும் தீ பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ பிடித்தது எறிந்த போது குடோனில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பின்னர் பொதுமக்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் கட்டிடம் மற்றும் இயந்திரங்கள்,துணிகள், அலங்கார பொருட்கள், செட்டுகள் தீயில் எரிந்து கருகியது. தீ விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பேரி கார்டின் மீது கார் மோதியதில் கீழே விழுந்த காவலர்

பேரி கார்டின் மீது கார் மோதியதில் கீழே விழுந்த காவலர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேயோன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து

0
42 mins agoshare
SK அளித்த விருந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved