Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 10:26 AM
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில்
இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்டிகைகளை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அதிக அளவில் வந்து சொல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேர் இன்று காலை கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரி சாலை அருகே சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அப்பொழுது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய சைக்கிள் கடையில் ஆள் இல்லாத நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் அமர்ந்து புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட கடைகாரர் சுற்றுலா பயணிகளை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிலர் திடீரென சுற்றுலாப்பயணிகளை
தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது .
இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கை,கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், பெண்களும் இதில் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இது குறித்து சைக்கிள் கடைக்காரரிடம் கேட்ட போது சுற்றுலா வந்தவர்களில் சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு சைக்கிளை எடுத்தால் அது குறித்து கேட்ட போது தகாத வார்த்தை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை உள்ளூர் மக்கள் தாக்குவதும், உள்ளூர் மக்களை சுற்றுலா பயணிகள் தாக்குவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தாக்கி கொள்வது அடிக்கடி அரங்கேற்றி வரும் நிலையில் இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved