தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரை தேடுவதற்கு போலீஸார் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. உயிரிழந்த மூதாட்டிக்கு திதி கொடுப்பதற்காக ஒகேனக்கல் சென்ற தேவரசன்பட்டியை சேர்ந்த விக்னேஷ், தாத்தா ராஜேந்திரனுடன் காவிரி ஆற்றைக் கடந்து மறுகரைக்கு செல்ல முயன்றபோது, சுழலில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.