Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்செந்தூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் ஓட்டப்பிடாரம் அருகே சென்ற போது, அவ்வழியே வந்த கார் பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved