Also Watch
Read this
முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதி விபத்து.. அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், சகோதரி உயிரிழப்பு
லாரியின் மீது கார் மோதி விபத்து
Updated: Sep 03, 2024 06:09 AM
நெல்லையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு போக்குவரத்து கழக
ஓட்டுநர் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலி.லாரியின்
இடிபாடுகளுக்குள் சிக்கிய காரில் இருந்து இருவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ
கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மகளை
கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்ட சோகம்.
கன்னியாகுமரி மாவட்டம் குறப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங் இவர்
அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.
இவரது மனைவி செரின் அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்து வருகிறார்.இவர்களது மகன்
அனுசெரின் (19) என்பவரை ஈரோட்டில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ஜெயச்சந்திர
சிங் அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் ஜெயச்சந்திர சிங்கின் மனைவி, மகள்
ஆகியோருடன் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர் பணிகளை முடித்துவிட்டு மீண்டும்
சொந்த ஊர் திரும்பிய போது கார் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே வந்து
கொண்டிருந்த நிலையில் முன்னே சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து
ஏற்பட்டது.இதில் லாரியின் அடியில் சிக்கிய காரில் முன் பகுதியில் இருந்த
ஜெயச்சந்திர சிங் மற்றும் அவரது சகோதரி ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு
போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்க பாளையங்கோட்டை தீயணைப்பு
துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய இருவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் முன்னிருக்கையில்
உயிரிழந்த நிலையில் இருந்த ஜெயச்சந்திர சிங்(50) மற்றும் அவரது சகோதரி ஜெயந்தி
(55) ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர் சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் மகளை சேர்ப்பதற்காக குடும்பத்துடன் சென்று திரும்பிய போது ஏற்பட்ட
விபத்தினால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved