நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வீட்டிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை, வளர்ப்பு பூனையை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.