Also Watch
Read this
Posted on: Feb 08, 2026 10:34 AM
By: Manigandan Raja

கார் மோதி விபத்து :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கடலூர் சித்தூர் சாலை அம்மாபாளையம் கூட்ரோடு அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேஷ்(32) தனது நண்பருடன் அம்மாபாளையம் கிராமத்திற்கு சென்று மீண்டும் தனது கிராமத்திற்கு செல்ல சித்தூர் கடலூர் சாலையை கடக்கமுயன்றனர்.
அப்போது வேலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஆகியவை நேருக்கு நேர் மோதியது. மேலும் இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்
லேசான காயத்துடன் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி வாலிபர் 2பேர்
தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved