கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 7-ம் வகுப்பு மாணவன் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்த நிலையில், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமது உஸ்மான் என்ற சிறுவன் வீடு திரும்பிய போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.