Also Watch
Read this
By: Fyrose Banu

கிருஷ்ணகிரியில் தக்காளி விலை கடும் விழ்ச்சியடைந்து 8 கிலோ தக்காளி 100 ரூபாய் விற்பனையாவதால் தக்காளி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 
சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இராயகோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, மாகராஜகடை, பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

டன் கணக்கில் தக்காளி ஏற்றுமதி
இப்பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் தக்காளி இராயகோட்டை மற்றும் சூளகிரி தக்காளி மார்கெட்டில் இருந்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

படிபடியாக குறைந்த தக்காளி விலை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உள் மாவட்டத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளி விலை படிபடியாக குறைந்துள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் தக்காளி விலை கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.

தக்காளி விலை கடும் வீழ்ச்சி
இன்றைய நிலவரப்படி 25 கிலோ கொண்ட கூடை தக்காளி 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் ஒருகிலோ 5 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு 8 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தக்காளிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved