Also Watch
Read this
By: Fyrose Banu

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் 500 மூத்தகுடிமக்கள் தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலில் 6 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியை சேர்ந்த 100 வயது ஆன ஆர்.சுப்பையாபிள்ளை, 99 வயதான அமராவதி உள்ளிட்ட ஆறு தம்பதியினருக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகரமன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் புடவை, வேஷ்டி, மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி மூத்த தம்பதியினருக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved