செங்கல்பட்டு அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், பையனூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.