Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமத்தில் குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் வழிதவறி வந்து முகாமிட்டுள்ளன.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை துரத்த முயன்றனர். காட்டு யானைகள் குயின்சோலை அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளன.
இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக தேயிலை பறிக்க செல்ல வேண்டாம், பொது மக்கள் இரவில் தனியே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர்
அறிவுறுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved