சென்னை அடுத்து குன்றத்தூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக நான்கு பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த மொய்தீன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில், போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து சென்னைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது