news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்
tv

Also Watch

tv

Read this

விரைவில் 3 புதிய பயணிகள் படகுகள்

கன்னியாகுமரி

12

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
velu main

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98 வது கூட்டம் ென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை

இந்தக் கூட்டத்தில் கடல்சார் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் எவ.வேலு கூறியதாவது, "தமிழ்நாடு என்பது 1600 கிமீ நீளம் கோடி கடற்கரையையும், 3 பெரும் துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதாக கூறினார்.

நாகை முதல் இலங்கை வரை கடல் போக்குவரத்து
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு மற்றும் துறைமுகங்கள் மேம்பாட்டு என எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 40 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாத கடலூர் துறைமுகம் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, நாகை முதல் இலங்கை வரை கடல் போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக பயன்பாட்டில் உள்ளதகவும் தெரிவித்தார்,

விரைவில் பெருந்தலைவர் காமராஜர் படகுசவாரி

மேலும் கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை முதல் விவேகானந்தர் மண்டபம் வரை கண்ணாடி பாலம் வைக்கப்பட்டு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர் என தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா பயணிகள் வள்ளுவர் சிலையை எளிதாக சென்று பார்க்கும் வகையில், கூடுதலாக மூன்று பயணிகள் படகுகள் வாங்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, காமராஜர், மார்சல் நேசமணி, ஜி.யு.போப் என பெயர் சூட்டப்பட்டிய படகுகளின் கட்டுமானம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவற்றில் பெருந்தலைவர் காமராஜர் படகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Link
“கனவு காண்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது…”

“கனவு காண்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது…”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
1 hr 21 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved