நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ATC டிப்போவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நிதி நிறுவன ஊழியரான சுகுமாரனின் இருசக்கர வாகனமும், பூபாலனின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பூபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சுகுமாரன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.