தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகளிரை காக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.