news-tamil-logo

3/19/2026, 4:27:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாய் இல்லாமல் பரிதவிக்கும் 2 குழந்தைகள்
tv

Also Watch

tv

Read this

தாய் இல்லாமல் பரிதவிக்கும் 2 குழந்தைகள்

புதுத்தெரு, தஞ்சாவூர்

Posted on: Feb 14, 2026 12:28 PM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட குழந்தைகளின் அழுகை சத்தம். நடுவீட்டில் தலை சிதைந்து உயிரிழந்து கிடந்த தாய். கிரைண்டர் குழவியால் மனைவியை அடித்தே கொன்ற கொடூரன். மனைவியை கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன?

பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட அழுகை சத்தம்
இரவு நேரம், அம்மா... அம்மான்னு கத்துற சத்தம் கேட்டுருக்கு. உடனே அக்கம்பக்கத்துல இருந்தவங்க பதறியடிச்சிட்டு போய் பாத்திருக்காங்க. அங்க, அகிலா-ங்குற இளம்பெண் தலை சிதைஞ்சபடி ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்துருக்காங்க. பக்கத்துலே அவங்களோட ரெண்டு பசங்களும் உக்காந்து அழுதுட்டு இருந்துருக்காங்க. தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரங்க, அகிலாவோட சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. அந்த விசாரணைக்கு அப்புறம்தான், கொலைக்கான காரணம் என்னனு தெரியவந்திருக்கு.

கூலி வேலை செய்து வந்த கணவன் அன்பரசன்
தஞ்சாவூர், திருவிடைமருதூர்ல உள்ள புதுத்தெரு பகுதிய சேர்ந்த அன்பரசன், கூலி வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. இவருக்கும், 28 வயசான அகிலாவுக்கும் கடந்த 2015ல கல்யாணம் நடந்திருக்கு. இந்த தம்பதிக்கு, 7 வயசுல தீபிகா-ங்குற மகளும், 2 வயசுல ஆதித்யா-ங்குற மகனும் இருக்காங்க. மதுப்பழக்கத்துக்கு அடிமையான அன்பரசன், தெனமும் நைட்டு மது குடிச்சிட்டுதான் வீட்டுக்கே வருவாராம். அதுமட்டுமல்ல, தலைக்கேறுன மதுபோதையில, மனைவிய போட்டு அடிக்கிறது, பிள்ளைகள போட்டு அடிக்கிறதுன்னு அடாவடி பண்ணிட்டு இருந்துருக்காரு. அன்பரசனோட குடிப் பழக்கத்துனாலேயே, அவங்க வீட்டுல சந்தோஷம்-ங்குற ஒன்னு இல்லாமலே போய்ருச்சு.

போதையில் மனைவி, பிள்ளைகளை தாக்கி அடாவடி
அன்பரசன் என்னதான் போதையில அடாவடித்தனம் பண்ணிட்டு இருந்தாலும், அகிலா தன்னோட கணவரோட கொடுமைகள சகிச்சிக்கிட்டு வாழ்க்கைய நடத்திட்டு இருந்தாங்க. ஆனா, நாளாக நாளாக அவரோட அடாவடித்தனம் எல்லை மீறி போயிருக்கு. சம்பவத்தனைக்கு நைட்டு, அன்பரசன் வழக்கம்போல மது போதையில வீட்டுக்கு வந்து, மனைவி அகிலாக்கிட்ட தகராறு பண்ணிருக்காரு. தினமும் இப்படி குடிச்சிட்டு வந்தா நம்ம வாழ்க்கை என்ன ஆகும், நம்மல பத்தி யோசிக்கலன்னா கூட பரவால, நமக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க, அவங்கள பத்தி ஒரு நாளாச்சு யோசிச்சு பாத்திருக்கியான்னு அகிலா, அன்பரசன்கிட்ட கோவமா கேட்டுருக்காங்க. அப்போ, என்கிட்டையே குரல உசத்தி பேசுறியான்னு கேட்டு மனைவிய சரமாரியா அடிச்சிருக்காரு.

Related Link
ஓவர் ஆக்டிங் செய்து  வசமாக சிக்கிய கெளரி

ஓவர் ஆக்டிங் செய்து வசமாக சிக்கிய கெளரி

தலையில கிரைண்டர் குழவியை போட்ட அன்பரசன்
அதுக்கப்புறமும், ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் அதிகமாகிருக்கு. ஒருகட்டத்துல கடும் ஆத்திரமடஞ்ச அன்பரசன், மதுபோதையில என்ன பன்றோம் ஏது பன்றோம்னு தெரியாம, வீட்டுல இருந்த கிரைண்டர் குழவிய எடுத்துட்டு வந்து மனைவி அகிலாவோட தலை மேலயே தூக்கி போட்டுருக்காரு. அதுல, அகிலா தலை சிதைஞ்சு சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க.

அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
இத, பாத்து அதிர்ச்சியடைந்த குழந்தைங்க ரெண்டு பேரும் அம்மா. அம்மான்னு கதறி அழுதுருக்காங்க. இதெல்லாம் நடந்தது நைட் 11 மணிக்கு. குழந்தைங்களோடு அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்துல இருந்தவங்க வந்து பாத்தப்பதான் இந்த கொடூர சம்பவமே தெரியவந்துச்சு. அடுத்து, மனைவிய கொலை செஞ்ச அன்பரசன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.

தாய், தந்தை இல்லாமல் தவிக்கும் 2 பிள்ளைகள்
தாய் உயிரிழந்துட்டாங்க, தந்தை ஜெயிலுக்கு போய்ட்டாங்க, கடைசி அந்த பெண் குழந்தைகள் ரெண்டு பேரும் தான் பெற்றோர் இல்லாம தவியா தவிச்சிட்டு இருக்காங்க. இந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம், அன்பரசனோட மதுப்பழக்கம்தான். அன்பரசன், மனைவிய கொல்லனும்னு நினச்சு கொல்லலன்னும், போதையில தெரியாம பண்ணிட்டேன்னும் போலீஸ்கிட்ட வாக்குமூலம் கொடுத்திருக்காரு. மது, நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு சொல்றது 100 சதவீத உண்மைதான். மதுப்பழக்கத்தால குடும்பமுமே சின்னாபின்னமாகிரும்ங்குறதுக்கு இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணமா அமஞ்சிருக்கு.

Related Link
பணியை விட்டு நீக்கியதால் கோபம்

பணியை விட்டு நீக்கியதால் கோபம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 39 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved