திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 18 மாணவர்கள் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து முன்னால் சென்ற தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.