திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டனர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற NGO-ஆல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடங்களை இடித்து நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.