ராமநாதபுரம் நகர் பகுதியில் போதிய அளவு மழை பெய்தும்கூட நீரை தேக்கி வைப்பதற்கு நீர்த்தேக்கம் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் முறையான திட்டமிடல் மூலம் பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த முடியும் எனவே நீர் தேக்கம் அமைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.