சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள வேலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியின் அவல நிலை.இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 60 மாணவர்களுக்கு மேல் படித்த இப்பள்ளியில் தற்சமயம் 13 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பள்ளியின் மேற்கூரை ஓடு உடைந்தும்,உட்புற சுவர்கள் விரிசல் ஏற்பட்டும்,வெளிபுற சுவர்கள் இடிந்த நிலையிலும், கழிப்பறைகள் பாழடைந்தும் உள்ளன. மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க வெளியே செல்லும் அவலநிலை ஏற்படடுள்ளது. மேலும் பள்ளி வகுப்பறையின் கதவு ஓட்டை விழுந்து காணப்படுவதால் எலி , பாம்பு என பல விஷசந்துக்கள் வகுப்பறைக்குள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ,எனவே கழிப்பறை வசதியுடன் கூடிய பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை அரசுக்கு விடுத்துள்ளனர்,