ரஜினி நடிப்பில் உருவான கூலி திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அதே தினம், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடதக்கது.