பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்கள் சண்டை போட்டு கொண்டது போல் செயல்படுகிறார்கள் என பேசி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சர்ச்சையில் சிக்கிய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் தேவார கொண்டா இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனிடையே மலைவாழ் மக்களை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலங்கானா மாநில மலைவாழ் வழக்கறிஞர் சங்கத்தினர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.