Also Watch
Read this
By: Manigandan Raja

தாய் கிழவி ரிலீஸ் :
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படத்தின் திரையரங்க உரிமையை AGS நிறுவனம் பெற்றுள்ளதாக SK PRODUCTIONS தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கிராமத்து கதையை பின்னணியாக கொண்டு ராதிகா சரத்குமார் 75 வயது மூதாட்டியாக நடித்திருக்கும் இத்திரைபப்டம், வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
துணிவு மற்றும் கில்லி :
கடந்த 2023ஆம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற துணிவு திரைப்படம், வரும் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காதலர் தினத்தையொட்டி ரீ-ரிலீஸான மௌனம் பேசியதே, மின்னலே, காதலர் தினம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

துணிவு ரிலீஸாஸாகும் அதே நாளில் விஜயின் கில்லி திரைப்படம் இரண்டாவது முறையாக ரீ-ரிலீஸாவதால் திரையரங்குகளில் கொண்டாட்டங்களை எதிர்பார்க்கலாம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved