விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மீரா ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வில்லனாக விஜய் ஆண்டனியின் உறவினர் அஜய் தீஷன் அறிமுகமாகிறார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் உயரதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.