லியோ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, CHRONICLES OF LEO என்ற பிரத்யேக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்து வெளியான லியோ திரைப்படம் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து ப்ளாக் பஸ்டர் படமாக மாறியது. படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், BEHIND THE SCENES காட்சிகளை CHRONICLES OF LEO என்ற பெயரில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினருடன் விஜய் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் விளையாடிய க்யூட் momementகளும் இடம்பெற்றுள்ளன.