பிரபல திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் தமது 94-வது வயதில் அவரது 61-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்புதிய திரைப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. Related Link இன்றைய ராசி பலன்கள் 01.02.2026