நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி துபாயில் நடிகர் அஜித்குமாரை சந்தித்து பேசிய வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. நடிப்பு, விளையாட்டு என இரண்டிலும் முத்திரை பதித்து வரும் அஜித்குமார், தற்போது 24H Dubai Series என்ற கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அஜித் துபாயில் முகாமிட்டுள்ளார். கூடவே ஏ.எல். விஜய் இயக்கத்தில் அவரது ரேஸிங் தொடர்பான ஆவணப்படமும் தயாராகி வருகிறது. துணிவு படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக பேசப்பட்ட நிலையில், அஜித்துக்கு கதை பிடிக்காததால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இதையும் படியுங்கள் : ரூ.141 கோடி வசூலை எட்டிய "சர்வம் மாயா" திரைப்படம்