Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 12:30 PM
By: Manigandan Raja

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் பட பெயர் மாற்றம் :
சல்மான் கானின் புதிய படமான Battle of Galwan னின் பெயர் மாத்ருபூமி- May War Rest in Peace என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய-சீன துருப்புகளுக்கு இடையே நடந்த மோதலின் பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய படத்திற்கு "நூறு சாமி" என பெயர் வைப்பு :
பிச்சைக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘நூறு சாமி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் :
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கும் இப்படத்தில் ஜிவி-க்கு ஜோடியாக ஸ்ரீ கெளரி பிரியாவும், முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
சென்சார் பிரச்சனை - ஜனநாயகன் படம் இன்று மறுஆய்வு?
சென்சார் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வு குழுவினர் இன்று மீண்டும் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..! இதற்காக படக்குழுவுக்கு தணிக்கை வாரியம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 9-ம் தேதி படத்தை மறு ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய தினம் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved