தனது பேட்டி திரித்து கூறப்பட்டு விட்டதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தான் எப்போதுமே நல்லதை மட்டுமே நினைப்பதாகவும் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் தான் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என கூறினார். மேலும் தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.