ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றனர். இந்த இரு அணிகளிலும் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்த தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.