அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பிரச்சார பாடலை உருவாக்க உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.அதன்படி அந்த அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏ.ஆர்.ரகுமான் 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கியுள்ளார்.