உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.