நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பைசன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நிலையில், படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், துருவ் விக்ரமின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பைசன் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.