மனதிற்கு நெருக்கமானவங்களோட எதிர்பாராத பிரிவு, மனதை உலுக்கும் சம்பவங்கள், துக்கம், சோகம்னு பல வகையான உணர்வுகளோட வெளிப்பாடு பெரும்பாலும் அழுகையா வெளிப்படுவது வழக்கம். ஆனால், பலர் மற்றவர்கள் முன்னாடி அழுவதை விரும்ப மாட்டோம். ஆனால், உண்மையிலயே அழுவதில் பலவித நன்மைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்... அழுகை மனிதர்களுக்கே உண்டான ஒரு இயல்பான உணர்ச்சி. அதீத மகிழ்ச்சி, கவலை, வருத்தம், சோகம், வலி என அனைத்துவிதமான உணர்வுகளின் வெளிப்பாடாக கண்ணீர் இருக்கும். இருந்தாலும், பொதுவெளியில் அதை வெளிப்படுத்த பலரும் விரும்புவது கிடையாது. இதனால் சிலர் தங்களுடைய சோகங்களை மனசுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு ரொம்ப இறுக்கமாக இருப்பாருங்கள். ஆனால், உண்மை என்னனு தெரியுமா?. அழுகிறதால பல நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வுகளின் முடிவுகள் கூறுகிறது. ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஒரு வருஷத்தில், அழும்போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்பின்ஸ் கண் பார்வையை மேம்படுத்தும் என்றும், மனசு அமைதியும், வலியைத் தாங்கக்கூடிய வலிமையையும் ஏற்படும் என்றும் ஆய்வில சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனசு விட்டு அழுவதால் மன அமைதி அதிகரிப்பதாகவும், தங்களுக்கு ஏற்பட்ட துக்கத்தில இருந்து ஒருவகை ஆறுதல் கிடைத்து அதில இருந்து மீண்டு வர ரொம்ப உதவுவதாகவும் ஆய்வு கூறுகிறது. மனதில் அழுகைய தேக்கி வைக்காமல், அழுகை மூலம் அதை வெளிப்படுத்துவதால், மனநிலை மேம்பட்டு நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும். ஒரு வருஷத்துக்கு சராசரியாக பெண்கள் 30 - 64 முறையும், ஆண்கள் 6 - 17 முறையும் அழுவதாகவும் ஆய்வில கூறப்பட்டுள்ளது. பெண்கள் பொதுவாக தங்களின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவர். அதேசமயம் அழுகை மூலம் தங்களின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திடுவர். இதனால், பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆண்களோ, பெண்களோ இனி அழுகை வரும்போது அதை அடக்கி வைக்காமல், அழுது மனதின் வலியை குறைத்து கொள்ளலாம்.