Also Watch
Read this
By: Web Team

பாங்காக்கில் நடைபெற்ற 73 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ramp walk ன் போது தவறி விழுந்த மிஸ் ஜமைக்கா விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 19 ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஜமைக்கா சார்பில் பங்கேற்ற 23 வயதான கேப்ரியல் ஹென்றி, மேடையில் ramp walk சென்றபோது தவறி விழுந்தார். இதில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றவர் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கண் மருத்துவரான கேப்ரியல் ஹென்றி ஜமைக்கா முழுவதும் பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved