முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு-2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துறைவாரியாக அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா ஆட்சியில் அமர்ந்து, தமிழினம் தலைநிமிர்ந்த நாள் இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு;மார்ச் 6 - அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatementஐ அறிவிக்க இருக்கிறேன். திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.0வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் உங்கள் அனைவரின் ஆதரவோடும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். Related Link திராவிட மாடல் 2.0 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்