ஈரானுக்கு எதிரான போர், மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். எண்ணெய் விநியோக தடையில் தொடர்ந்து ஈடுபட்டால், இதுவரை தாக்கியதை விட 20 மடங்கு அதி தீவிர தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரித்து உள்ளார். ஈரான் எச்சரிக்கை, டிரம்ப் உத்தரவு ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் கப்பலை தாக்கி அழிப்போம் என்றும், ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், பாரசீக வளைகுடா வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.கடும் தட்டுப்பாடு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மட்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி விட்டது. இந்நிலையில், சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில், Strait of Hormuz எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், ஈரான் மீது இதுவரை தாக்கப்பட்டதை விட 20 மடங்கு கடுமையாக தாக்குதல் நடத்துவோம். மீண்டும் ஒரு நாடாக ஈரான் கட்டி எழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம். மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும். ஆனால், இதெல்லாம் நடக்கக் கூடாது என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். Related Link என் கூட யாராச்சும் சண்டைக்கு வாங்க...