news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஏவுகணை ஏவி வடகொரிய ராணுவம் சோதனை
tv

Also Watch

tv

Read this

ஏவுகணை ஏவி வடகொரிய ராணுவம் சோதனை

அதிகாரப்பூர்வ செய்தி

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

DESTROYER என்ற போர்க் கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி, வடகொரிய ராணுவம் சோதனை நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை சோதனையை தனது மகளுடன் சேர்ந்து அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

போர்க் கப்பலில் இருந்து...
சோ ஹியோன் என்ற போர்க் கப்பலில் இருந்து ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக ஏவி உள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தீவுகளை துல்லியமாக, இந்த ஏவுகணை தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது 14 வயதுடைய மகளும் அறையில் அமர்ந்து பார்வையிட்டு உள்ளனர்.

பாதுகாப்பு ஒத்திகை
இந்த ஒத்திகையின் போது, நம்பகமான அணு ஆயுத தடுப்பு திறனை பராமரிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். தனது அரசியல் வாரிசாக மகளை கொண்டு வர அதிபர் கிம் ஜாங் உன் விரும்புவதாகவும், இதன் காரணமாகவே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஏவுகணை சோதனை போன்ற நிகழ்வுகளில் மகளையும் பங்கெடுக்கச் செய்வதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன.

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, தங்களின் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று, வடகொரிய அரசு கருதுகிறது. இந்த சூழலில், வட கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக, அந்நாட்டின் அரசு தரப்பில், அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.


Related Link
பெரும் விபத்து தவிர்ப்பு, தப்பினர் 133 பயணிகள்

பெரும் விபத்து தவிர்ப்பு, தப்பினர் 133 பயணிகள்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புகழூர் நானபரப்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா

0
2 mins agoshare
புகழூர் மாரியம்மன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved