ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் தேர்வுக்காக தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் என மொத்தம் 49 இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 49 இடங்களை தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி பெற்றதால், அந்த கூட்டணியே ஆட்சியமைக்க உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.