news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல் 2026 குஜராத் டைட்டன்ஸை 29 ரன்களில் வீழ்த்திய கொல்கத்தா
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026 குஜராத் டைட்டன்ஸை 29 ரன்களில் வீழ்த்திய கொல்கத்தா

கொல்கத்தா Vs குஜராத்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29 ரன்களில் வீழ்த்திய கொல்கத்தா

ஐபிஎல் 2026 தொடரின் முக்கிய லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

கொல்கத்தா Vs குஜராத்
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்களில் 247/2 ரன்கள் குவித்த நிலையில், இலக்கை துரத்திய குஜராத் 20 ஓவர்களில் 218/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனினும், இந்த வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது.

அதிரடியான ஆட்டம்
அதிரடியான தொடக்கத்துடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, குஜராத் பந்து வீச்சை சிதறடித்தது. தொடக்கம் முதலே ரன் வேகத்தை உயர்த்திய கேகேஆர் பேட்ஸ்மேன்கள், 247 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை நிர்ணயித்தனர்.

போராடிய களம்
பின்னர், களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சுப்மன் கில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி 49 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். ஜோஸ் பட்லரும் 35 பந்துகளில் 57 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடினார். ஆனால், சுனில் நரைன் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். கேமரன் கிரீன் மற்றும் சௌரப் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அழுத்தத்தை அதிகரித்தனர்.

கேகேஆர் 7ஆவது இடத்தில்...
இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி 11 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் வென்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியே பிளேஆஃப் வாய்ப்பு அமையும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.

Related Link
ஐபிஎல் 2026 லக்னோவின் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2026 லக்னோவின் அதிரடி வெற்றி

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குழந்தைகளை வைத்து பிரச்சாரம் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

4
12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved