news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
tv

Also Watch

tv

Read this

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

பேசுபொருளான கோலியின் இன்ஸ்டா லைக்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 27ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.

கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் அணியிடம் வீழ்ந்தது

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 22 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில், 4 சிக்சர்களும், 6 பவுன்டரிகளும் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிவரை போராடியும்போதும், 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28 மற்றும் 29ஆவது போட்டிகள் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பகல் 3.30 மணியளவில் நடைபெறும் 28-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்
அதேபோல, பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பேசுபொருளான கோலியின் இன்ஸ்டா லைக்
பிரபல ஜெர்மன் இன்ப்ளூயன்சரின் இன்ஸ்டா புகைப்படத்துக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி லைக் செய்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளான நிலையில், கோலிக்கு இன்ப்ளூயன்சர் லிஸ்ஸாலாஸ் (Lizzalazz) ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.

தான் கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தபோது கோலி பற்றி தனக்கு தெரியவந்ததாகவும், அப்போதுதான் ஐபிஎல் போட்டிகளை பார்க்க தொடங்கி RCB அணியின் ரசிகையாக மாறியதாகவும் அவர் கூறினார். மேலும், தனது புகைப்படத்துக்கு விராட் கோலி லைக் செய்தது மகிழ்ச்சியே என்றும் அவர் கூறி உள்ளார்.

Related Link
பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
7 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved