Also Watch
Read this
By: Web Team

இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் 7 கேள்விகளை எழுப்பி, அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
1. வீடு தோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்கு உரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதை சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3. Registration of Electors Rules-1960இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநில தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4. பிற மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் போது, இந்த நடைமுறை சிக்கல்களை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா?
5. கடந்த 01.05.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17.07.2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். அது எப்போது நிறைவேற்றப்படும்?
6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது?
7. “நியாயமான தேர்தல்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved