வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என தேடி அலைந்த பெற்றோர். பக்கத்து வீட்டிற்குள் இருந்த டிரம்மை எட்டிப் பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி. துணியால் சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த சிறுமியின் சடலம். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட். கொலையாளியை பல இடங்களில் தேடி அலைந்த போலீஸ். பக்கத்து கிராமத்தில் உள்ள குளத்திற்குள் கொலையாளியும் சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி. சிறுமியை கொலை செய்த குற்றவாளி உயிரிழந்தது எப்படி? * தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி * சிறுமியை நீண்ட நேரமாக காணாமல் தேடிய தாய்* சிறுமியை குலவர்தன் அழைத்துச் சென்றதாக தகவல்ஸ்கூலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்த சிறுமி, மற்ற சிறுமிகளோட நின்னு விளையாடிட்டு இருந்துருக்காங்க. அப்ப சிறுமியோட தாய், விளையாடுனது போதும், உள்ள வந்து ஹோம் ஒர்க் பண்ணுன்னு சொல்லிருக்காங்க. அப்ப சிறுமி கிட்ட இருந்து எந்த ஒரு பதிலும் வரல. இதனால தாய் வாசலுக்கு போய் பாத்துருக்காங்க. ஆனா சிறுமி அங்க இல்லை. இதனால சிறுமி கூட விளையாடிட்டு இருந்த மத்த சிறுமிகளோட வீட்டுக்கு போய் மகள பத்தி கேட்ருக்காங்க தாய். ஆனா அவங்க எங்களக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த நேரத்துல அங்க வந்த பெண் ஒருத்தங்க, உங்க மகள குலவர்தன் தான் கூப்டுட்டு போனானு சொல்லிருக்காங்க. இதனால தாய் உடனே குலவர்த்தனனோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப வீடு திறந்த நிலையில கிடந்துருக்கு. ஆனா வீட்டுக்குள்ள யாருமே இல்லை. இதனால தன்னோட மகள தேடி வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க. * வீட்டிற்குள் இருந்த டிரம்மிற்குள் கிடந்த சிறுமியின் சடலம்* துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த சடலம்* குலவர்தனை பல இடங்களில் தேடி அலைந்த போலீஸ் அப்ப எதார்த்தமா அந்த வீட்டுக்குள்ள இருந்த டிரம்ம எட்டிப் பாத்தருக்காங்க. அதுல சிறுமி துணியால சுற்றப்பட்ட நிலையில சடலமாக கிடந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச தாய், சத்தம்போட்டு கதறி அழுது பக்கத்து வீட்டுக்காரங்கள உதவிக்கு கூப்டுருக்காங்க. உடனே அங்க வந்தவங்க சிறுமிய மீட்டு ஆம்புலன்ஸ் மூலமா மருத்துவமனைக்கு அனுப்பி வச்சாங்க. அங்க சிறுமிய பரிசோதித்த டாக்டர் சிறுமி உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. சிறுமியோட உடல்ல காயங்கள் இருந்ததால சடலத்த பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சுருக்காங்க. அதுபடி மறுநாள் வெளியான ரிப்போர்ட்ல சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையானதா பதிவாகியிருந்துருக்கு. இதனால இத கொலை வழக்கா பதிவு பண்ண போலீஸ், குலவர்த்தன தேட ஆரம்பிச்சுருக்காங்க. குலவர்த்தனோட செல்போன் சிக்னல ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அதே மாதிரி அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க.* குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர் குலவர்தன்* பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த குலவர்தன்* சிறுமியை தனியாக அழைத்து சென்ற இளைஞர் ஆனா, குலவர்தன் பத்தி போலீஸ்க்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கல. இதுக்கிடையில போலீஸ்க்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன ஒருத்தரு, பக்கத்து கிராமத்துல உள்ள குளத்துல இளைஞர் குலவர்தன் உயிரிழந்து கிடக்குறதா சொல்லிருக்காங்க. இதகேட்டு உடனே சம்பவ இடத்துக்கு போன போலீஸ் குலவர்தனோட சடலத்த மீட்டு விசாரணையில இறங்குனாங்க. ஆந்திராவுல உள்ள அன்னமய்யா பகுதியை சேந்தவரு குலவர்தன். எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாத குலவர்தன் மதுபோதைக்கு அடிமையாகி ரோட்ல போற வர்ற பெண்கள் கிட்ட தொடர்ந்து பிரச்னை பண்ணிக்கிட்டே இருந்துருக்காரு. இவரு மேல போலீஸ் ஸ்டேஷன்ல நிறைய கேஸ் இருக்குதுன்னு கூறப்படுது. சம்பவத்தன்னைக்கு சிறுமி வீட்டு வாசல்ல நின்னு விளையாடிட்டு இருந்தாங்க. அப்ப அங்க யாரும் இல்லாதத தெரிஞ்சுக் கிட்ட குல்வர்தன் சிறுமி கிட்ட சாக்லேட் வாங்கித் தர்றதா சொல்லி தன்னோட வீட்டுக்கு கூப்டு போய்ருக்காரு.* சிறுமியை வன்கொடுமை செய்து...* குளத்திற்குள் சடலமாக கிடந்த குலவர்தன்* குலவர்தன் உயிரிழந்த காரணம் குறித்து விசாரணைஅடுத்து சிறுமிகிட்ட பாசமா பேசிக்கிட்டு இருந்த குல்வர்தன், திடீர்ன்னு சரமாரியா தாக்கிருக்கான். இதனால வலி தாக்க முடியாத சிறுமி மயங்கி விழுந்துட்டாங்க. அடுத்து சிறுமிய பாலியல் வன்கொடுமை பண்ண குலவர்தன், சிறுமிய உயிரோட விட்டு வச்சா, நம்மள அவளோட பெற்றோர் கிட்டயும், ஊர் காரங்க கிட்டயும் மாட்டி விட்ருவான்னு நினைச்சு, சிறுமிய கழுத்த நெரிச்சு கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டான். இதகேட்டு ஆத்திரமடைஞ்ச கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்துல ஈடுபட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குல்வர்தன தேட ஆரம்பிச்சாங்க. அப்ப குல்வர்தன் பக்கத்து கிராமத்துல உள்ள குளத்துல உயிரிழந்து கிடந்துருக்கான். உடனே அவரோட சடலத்த மீட்ட போலீஸ், குல்வர்தன் எப்படி உயிரிழந்தான்? குழந்தைய பாலியல் வன்கொடுமை பண்ண குற்ற உணர்ச்சியால தற்கொலை பண்ணிக்கிட்டானா அல்லது அவர யாரும் அடிச்சு கொலை செஞ்சுட்டாங்ளான்னு விசாரிச்சுட்டு இருக்காங்க. Related Link கணவன் கதையை முடித்த மனைவி